jeudi 11 novembre 2010

கண்ணீா் அஞ்சலி

ஆதிதமிழ் காக்கும் அருந்தொண்டில் முன்னின்று
பாதிவழி காட்டிப் பறந்ததுமேன்! - நீதியோ!
மீதிவழி  யானறியேன்! மீளாத் துயா்தந்து
சோதிவழி சென்றதுமேன் சொல்லு! 



dimanche 31 janvier 2010

செந்தமிழ்க் காவலர் கி. இலக்குவனார் நூற்றாண்டு விழா பொங்கல் விழா அழைப்பிதழ்

செந்தமிழ்க் காவலர் கி. இலக்குவனார் நூற்றாண்டு விழா
பொங்கல் விழா அழைப்பிதழ்  



samedi 16 janvier 2010

செம்பொருள்

வள்ளுவம் போற்றுக

மெய்யுணர்தல் ஒன்றேதான் மேன்மை தருமென்றும்
உய்யும் வழியென்றும் ஓதிவைத்தார் - தெய்வப்
புலவர் திருக்குறளைப் பொன்போலப் போற்றி
நிலையாக வாழ்கவே நீடு

கல்லாதார் அடைகின்ற கவலை யெல்லாம்
கண்ணில்லார் காணாத காட்சி யாகும்!
இல்லாதார் படுகின்ற இன்ன லெல்லாம்
இருட்டினிலே தடுமாறும் தன்மை யாகும்!
பொல்லாதார் பரிகின்ற புன்மை யெல்லாம்
புவியினிலே அறமழிக்கும் செய்கை யாகும்!
நல்லார் இப்பிறப்பின் கேடு நீங்க
நல்லறிவாம் செம்பொருளை நாடு வாரே!

கொலைகளவு செய்பவர்தாம் அவைகள் யாவும்
குற்றமெனத் தெரிந்தபின்னும் துணிந்து செய்வார்!
கலைபலவும் கற்றவரும் தீ(து) அறிந்தும்
கள்ளுண்டு மதியிழந்து மயங்கி வீழ்வார்!
விலையில்லா மெய்ம்மைக்கே வேட்டு வைத்து
வீணரிங்குப் பொய்மைதனைத் துணையாயக் கொள்வார்!
நிலையில்லா இப்பிறப்பின் கேட நீங்க
நிறைமதியாம் செம்பொருளைத் தேடு வாரே!

மண்ணாசை கொண்டவர்கள் மகிழ்வை நாடி
மண்ணிற்கே சுமையாகி மாண்டு போனார்!
இபண்ணாசை கண்டவர்கள் பெருமை குன்றிப்
பெயரிழந்து வாழ்விழந்து வேண்டா ரானார்!
பொன்னாசை யுற்றவரோஅச்சம் சூழப்
பொய்யுறக்கம் பெற்றுமனம் வாட லானார்!
தன்னசை தரும்பிறப்பின் கேடு நிங்கச்
சால்புடையொர் செம்பொருளை விரும்பு வாரே!

பிறப்பிற்குப் பேதைமையே சாட்சி யாகிப்
பெரும்பொருளாய் இருப்பதையே காணு கின்றோம்!
சிறப்பிற்குச் செம்பொருளே காட்சியாகிச்
சீர்மணக்கும் மெய்ப்பொருளை உணரு கின்றோம்!
உறைப்பான உணவிற்கும் உப்பு வேண்டும்!
உள்ளத்துள் அன்பென்னும் பிடிப்பு வேண்டும்!
பொறுப்பாக வடலூரர் சாகாக் கல்வி
போதித்தார் செம்பொருளைப் பேணு தற்கே!

கவிஞர் தே. சனார்த்தனன். புதுவை